உதவி பேராசிரியர்கள் போராட்டத்துக்கு நாராயணசாமி ஆதரவு

புதுவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் உதவி பேராசிரியர்கள் போராட்டத்துக்கு நாராயணசாமி ஆதரவு தெரிவித்தனர்.
புதுச்சேரி
புதுவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் துணை பேராசிரியர்கள் பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 29-ந்தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று 10-வது நாளாக அவர்களது போராட்டம் தொடர்ந்தது. காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், தாகூர் கலைக்கல்லூரி முன்பு நடக்கும் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள உதவி பேராசிரியர்களுக்கு முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.
Related Tags :
Next Story






