தேசிய கருத்தரங்கம்


தேசிய கருத்தரங்கம்
x

புதுவை மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் மிடிலென்ஸ் '23' நடைபெற்றது.

புதுச்சேரி

கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் மிடிலென்ஸ் '23' நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மலர்க்கண் கருத்தரங்கை தொடங்கி வைத்தார். மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராணயசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினா். மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறை தலைவர் அருண்மொழி கருத்தரங்கு அறிக்கை வாசித்தார்.

சிறப்பு விருந்தினராக புதுவை பிளேவர்ஸ் இந்தியா நிறுவன தலைவரும் இந்திய தொழிற்சங்க அமைப்பின் முன்னாள் தலைவருமான சுரீந்தர் கலந்து கொண்டு 'சுற்றுசூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் அதன் அவசியம்' குறித்து மாணவர்களிடையே பேசினார்.

கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிப்பு, தொழில்நுட்ப திறன் போட்டி, வினாடி வினா போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் தொழில்நுட்ப துறை தலைவர் சிவகுமார் நன்றியுரை கூறினார். இதற்கான ஏற்பாடுகளை அனைத்துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.


Next Story