என்.சி.சி. அலுவலகத்தில் அதிகாரி ஆய்வு


என்.சி.சி. அலுவலகத்தில் அதிகாரி ஆய்வு
x

காரைக்காலில் என்.சி.சி. அலுவலகத்தில் அதிகாரி ஆய்வு செய்தனர்.

காரைக்கால்

என்.சி.சி. தமிழ்நாடு இயக்குனரக துணை இயக்குனர் ஜெனரல் கமோடர் அதுல் குமார் ரஸ்தோகி, காரைக்கால் என்.சி.சி. அலுவலகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, காரைக்கால் மாவட்ட என்.சி.சி. அலுவலகத்தில் இணைந்துள்ள கல்லூரிகள், பள்ளிகள், மாணவர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கு கொடுக்கப்படும் வருடாந்திர பயிற்சிகள் குறித்த தகவல்களை கேட்டறிந்தார். அப்போது அலுவலக கமாண்டிங் அதிகாரி கர்ணல் எல்.கே. ஜோஷி விளக்கமாக எடுத்துரைத்தார். மேலும் அலுவலக கோப்புகள், வரவு-செலவு சம்பந்தமான கோப்புகளை ஆராய்ந்து கையொப்பமிட்டார்.

இதைத்தொடர்ந்து காரைக்கால் மாவட்ட என்.சி.சி. அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட துப்பாக்கி (பயிற்சி) சுடும் இடத்தினை பார்வையிட்டார். உடன் புதுச்சேரி குரூப் கர்ணல் சோம் ராஜ் குலியா உடன் இருந்தார்.

அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த ஜெனரல் கமோடர் அதுல் குமார் ரஸ்தோகி, புதுச்சேரி அரசு, துப்பாக்கி சுடுவதற்கான இடத்தை மட்டும் வழங்கியுள்ளது. இந்த இடத்திற்கு வருவதற்கான சாலை வசதி இல்லாததால் இந்த பயிற்சிக்கான இடம் பயன்பாட்டிற்கு வருவதில் காலதாமதம் ஏற்படுகிறது. என்.சி.சி. சார்பாக அனைத்து நடைமுறைகளும் செய்யப்பட்டுள்ளது. அரசு தான் இனி தேவையான நடவடிக்கையும் நிதியும் ஒதுக்க வேண்டும் என்றார். இதைத்தொடர்ந்து அவர் திருவேட்டக்குடியில் என்.ஐ.டி. மாணவர்களுடன் கலந்துரையாடினார்.


Next Story