நரம்பியல், மூளை தண்டுவட அறுவை சிகிச்சை முகாம்


நரம்பியல், மூளை தண்டுவட அறுவை சிகிச்சை முகாம்
x

புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரி சார்பில், நரம்பியல் மற்றும் மூளை தண்டுவட அறுவை சிகிச்சை முகாம் இன்று நடைபெற்றது

காரைக்கால்

புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரி சார்பில், நரம்பியல் மற்றும் மூளை தண்டுவட அறுவை சிகிச்சை முகாம் இன்று நடைபெற்றது. புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த முகாமில் சிறப்பு டாக்டர்கள் குழு காரைக்கால் வருகை புரிந்து, பொதுமக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சையும் மற்றும் ஆலோசனைகளையும் வழங்கினார்கள். காலை 9 மணிக்கு துவங்கிய இந்த சிறப்பு முகாம் மதியம் 12 மணி வரை நடைபெற்றது. முகாமில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சையும் மருத்துவ ஆலோசனைகளயும் பெற்று பயனடைந்தார்கள்.


Next Story