உரிமத்தை புதுப்பிக்காத 'பாசிக்' மதுபான கடைகள் 'சீல்'


உரிமத்தை புதுப்பிக்காத  பாசிக் மதுபான கடைகள் சீல்
x

உரிமத்தை புதுப்பிக்காததால் பாசிக் நிறுவன மதுபான கடைகளுக்கு சீல் வைத்து கலால்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

புதுச்சேரி

உரிமத்தை புதுப்பிக்காததால் பாசிக் நிறுவன மதுபான கடைகளுக்கு சீல் வைத்து கலால்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

மதுபான கடைகள்

புதுவையில் அரசு சார்பு நிறுவனங்களான பாப்ஸ்கோ, பாசிக், அமுதசுரபி உள்ளிட்ட நிறுவனங்களை லாபத்தில் இயங்க செய்ய அரசு சார்பில் மதுபான கடைகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டன.

ஆனால் அந்த நிறுவனங்களால் மதுபான கடைகளை லாபத்தில் இயங்க வைக்க முடியவில்லை. இதனிடையே பாப்ஸ்கோ நிறுவன மதுபான கடைகளை பொது ஏலத்தில் விட அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

சீல் வைப்பு

இந்தநிலையில் பாசிக் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட கடைகளும் லாபத்தில் இயங்கவில்லை. இதனால் பாசிக் நிறுவனம் மதுபான கடைகளுக்கான உரிமத்தை புதுப்பிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்துக்கு சொந்தமான கடைகளான மணமேடு, கரியமாணிக்கம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடைகளுக்கு கலால்துறை 'சீல்' வைத்துள்ளது.

மேலும் அங்கு மதுபான விற்பனை உரிமத்தை புதுப்பிக்காத காரணத்தால் கலால்துறை துணை ஆணையரின் உத்தரவின்படி உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்த கடைகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. கலால்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை பாசிக் ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story