ஆதிதிராவிட மாணவர் விடுதியில் மீண்டும் அசைவ உணவு


ஆதிதிராவிட மாணவர் விடுதியில் மீண்டும் அசைவ உணவு
x

புதுவையில் ஆதிதிராவிட மாணவர் விடுதியில் மீண்டும் அசைவ உணவு வழங்கப்பட்டது.

புதுச்சேரி

புதுவை மாநிலத்தில் புதுச்சேரியில் 16, காரைக்காலில் 10, ஏனாமில் 1 என 27 ஆதிதிராவிட மாணவர் விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு சில ஆண்டுகளாக அசைவ உணவுகள் வழங்கப்படாமல் இருந்தது.

ஆதிதிராவிட மாணவர், விடுதிகளில் மீண்டும் அசைவ உணவு வழங்கவேண்டும் என்று மாணவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். அனைத்து கட்சியினரும் இதுதொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் சந்திரபிரியங்கா ஆகியோரை சந்தித்து வலியுறுத்தி வந்தனர்.

இந்தநிலையில் முதல்-அமைச்சர் உத்தரவுப்படி துறை இயக்குனர் இளங்கோவன், அசைவ உணவு வழங்க நடவடிக்கை எடுத்தார். அதன்படி இன்று முதல் மீண்டும் ஆதிதிராவிட மாணவர் விடுதிகளில் அசைவ உணவு வழங்குவது தொடங்கப்பட்டுள்ளது. வாரத்தில் 2 நாட்கள் அசைவ உணவு வழங்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 More update

Next Story