ஒரு அரசு பள்ளிக்கூடம் 100 சதவீதத்தை எட்டவில்லை

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியான நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் ஒரு அரசு பள்ளி கூட 100 சதவீதத்தை எட்டவில்லை.
காரைக்கால்
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியான நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் ஒரு அரசு பள்ளி கூட 100 சதவீதத்தை எட்டவில்லை.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு
காரைக்கால் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 2,603 மாணவ, மாணவிகளும், தனித்தேர்வர்களாக 175 பேரும் என மொத்தம் 2,778 மாணவ, மாணவிகள் எழுதினர். இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
தேர்வு முடிவுகளை மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், துணை கலெக்டர் ஜான்சன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராஜசேகரன், மேல்நிலைக்கல்வி துணை இயக்குனர் ராஜேஸ்வரி ஆகியோர் வெளியிட்டனர்.
100 சதவீதம் எட்டவில்லை
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 914 மாணவர்கள், 1117 மாணவிகள் என மொத்தம் 2,031 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 79.43 சதவீதம் ஆகும். காரைக்காலில் 100 சதவீதம் தேர்ச்சியை 7 தனியார் பள்ளிகள் பெற்றன. அதே சமயம் 59 அரசு பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சியை எந்த பள்ளியும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது, கடந்த ஆண்டை காட்டிலும் தேர்ச்சி சதவீதம் குறைந்ததால் இனி மாணவர்கள் கல்வி கற்றலில் அதிகம் கவனம் செலுத்தவேண்டும் என கலெக்டர் குலோத்துங்கன் அறிவுறுத்தினார்.
தேர்ச்சி சதவீதம் குறைவு
கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி சதவீதம் 90.19 ஆக இருந்தது. இந்த ஆண்டு 79.43 ஆக குறைந்துள்ளது. அதாவது 10.76 சதவீதம் குறைந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, தேர்ச்சி சதவீதம் குறைவு குறித்து கல்வி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியபோது, அவர்கள் பதில் சொல்லாமல் நழுவி சென்றுவிட்டனர்.