என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் ஆலோசனை


என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் ஆலோசனை
x

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காங்கிரஸ், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்கள்.

புதுச்சேரி

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காங்கிரஸ், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்கள்.

ஜனாதிபதி தேர்தல்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நிறைவடைவதையொட்டி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாடு முழுவதும் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜ.க. வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர்.

புதுவையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவானது சட்டசபை செயலகத்தின் 4-வது மாடியில் உள்ள கருத்தரங்கு அறையில் (கமிட்டி அறை) நடக்கிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி

இந்தநிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி (பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரஸ்) மற்றும் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் தனியார் ஓட்டலில் நேற்று இரவு நடந்தது. கூட்டத்திற்கு ரங்கசாமி தலைமை தாங்கினார். இதில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ.ஜெயக்குமார், லட்சுமி நாராயணன், சாய் சரவணன்குமார், சந்திரபிரியங்கா மற்றும் பா.ஜ.க, என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் சுயேட்சை ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பலர் கலந்துகொண்டனர்.

தி.மு.க., காங்கிரஸ்

இதேபோல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத், எதிர்க்கட்சி தலைவர் சிவா, நாஜீம், அனிபால்கென்னடி, சம்பத், செந்தில்குமார், நாக.தியாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


Next Story