குடிநீருக்காக ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு

குடிநீருக்காக ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு
x

காரைக்கால் வடமட்டம் கிராமத்தில் குடிநீருக்காக ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள், கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

காரைக்கால்

காரைக்கால் வடமட்டம் கிராமத்தில் குடிநீருக்காக ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள், கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

குடிநீருக்காக...

காரைக்கால் மாவட்டம் வடமட்டம் கிராமத்தில் பல 100 ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளது. இங்கு நிலத்தடி நீரை நம்பி விவசாயம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கோட்டுச்சேரி பகுதி குடிநீர் தேவைக்காக வடமட்டம் கிராமத்தில் இருந்து ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் கொண்டு செல்ல பொதுப்பணித்துறை அதிகாரிகள் திட்டமிட்டனர்.

இதற்காக ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி வடமட்டம் கிராமத்தில் பொதுப்பணித்துறை சார்பில் இன்று தொடங்கப்பட்டது. இதை அறிந்த கிராம மக்கள், விவசாயிகள் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதிகாரிகளுடன் வாக்குவாதம்

தங்கள் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்தால், நிலத்தடிநீர் பாதிக்கப்படும், இதனால் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்று கூறி, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை நிறுத்திவிட்டு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

Next Story