சர்வீஸ் சாலை அமைக்க அதிகாரிகள் ஆய்வு


சர்வீஸ் சாலை அமைக்க அதிகாரிகள் ஆய்வு
x

கண்டமங்கலம் பகுதியில் சர்வீஸ் சாலையை அமைக்க ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது.

கண்டமங்கலம்

புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அதற்காக பல்வேறு இடங்களில் சர்வீஸ் ரோடு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கண்டமங்கலம் வள்ளலார் மேல்நிலைப்பள்ளி எதிரே சர்வீஸ் சாலை அமைக்காமல் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்றது. இதனால் அரியூர் பகுதிக்கு செல்வதற்கும், வருவதற்கும் வழியில்லாமல் போய்விடும் நிலை இருந்து வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று கூடி கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியினை தடுத்து நிறுத்தினர். அதன் பிறகு அங்கு சர்வீஸ் சாலை அமைக்க கட்டுமான நிறுவனத்திடம் கண்டமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பிரியதர்ஷினி முருகன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மேலும் பொதுமக்கள் மனுவாகவும் அளித்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று நகாய் மாவட்ட திட்ட அலுவலர் சக்திவேல் டி.பி.எல். திட்ட அலுவலர் குமார் செங்கோட்டையன் ஆகியோர் 200 மீட்டர் தூரத்திற்கு அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டனர். அதன்படி, சர்வீஸ் சாலையை அமைக்க ஆய்வு பணி இன்று மேற்கொள்ளப்பட்டது.


Next Story