பழைய நீதிமன்ற வளாகம் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பு


பழைய நீதிமன்ற வளாகம் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பு
x

காரைக்கால்

காரைக்கால் மாவட்ட நேரு வீதியில் பழைய கோர்ட்டு வளாகம் இயங்கி வந்தது. இங்கு போதுமான வசதி இல்லாத காரணத்தாலும், கட்டிடம் பழமையானது என்பதாலும், காரைக்கால் பைபாஸ் சாலை அருகே, புதிய கோர்ட்டு வளாகம் கட்டப்பட்டு அங்கு மாற்றப்பட்டது. அதனை தொடர்ந்து பழைய கோர்ட்டு வளாகம் எந்தவித பயன்பாடும் இல்லாமல் இருந்து வந்தது. இந்தநிலையில் பழைய கோர்ட்டு வளாகம் பயன்பாடு இன்றி நீதித்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.

காரைக்கால் மாவட்டத்தில், பல்வேறு அரசு அலுவலகங்கள், வாடகை கட்டிடங்களில் இயங்குவதால் பழைய கோர்ட்டு வளாகத்தை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

இதைத்தொடர்ந்து பழைய கோர்ட்டு வளாகத்தை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. புதிய கோர்ட்டு வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி இளந்திரையன் கலந்து கொண்டு, காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கனிடம் பழைய கோர்ட்டு வளாகத்தின் சாவியையும், அதற்கான ஆவணத்தையும் ஒப்படைத்தார்.

நிகழ்ச்சியில் புதுச்சேரி தலைமை நீதிபதி தனபால், நாஜிம் எம்.எல்.ஏ., துணை கலெக்டர்கள் ஜான்சன், பாஸ்கரன், மாவட்ட நீதிபதி அல்லி மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள், வக்கீல்கள் கலந்து கொண்டனர்.


Next Story