குளத்தில் மூழ்கி முதியவர் பலி


குளத்தில் மூழ்கி முதியவர் பலி
x

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு பகுதியில் மனைவியின் கண் முன்னே குளத்தில் மூழ்கி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

காரைக்கால்

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு பூமங்களம் மேலத்தெருவில் வசித்து வந்தவர் திருஞானம் (வயது 62). அவரது மனைவி சகுந்தலா. இன்று திருஞானம் வீட்டின் அருகே உள்ள குளத்தில் குளித்து கொண்டிருந்தார். அவரது மனைவி சகுந்தலா குளத்தின் கரையில் மீன் கழுவிக் கொண்டிருந்தார். அப்போது குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றதால் திருஞானம் தண்ணீரில் தத்தளித்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சகுந்தலா கூச்சல் போட்டார். இதையடுத்து அவரது மகன் சந்திரசேகரன் ஓடி வந்து குளத்தில் இறங்கி தந்தையை மீட்டு கரைக்கு தூக்கி வந்தார். மயக்க நிலையில் இருந்து அவரை சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் திருஞானம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருநள்ளாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story