புதிய புறக்காவல் நிலையம் திறப்பு


புதிய புறக்காவல் நிலையம் திறப்பு
x

காலாப்பட்டு சுனாமி குடியிருப்பில் புதிய புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது.

காலாப்பட்டு

காலாப்பட்டு சுனாமி குடியிருப்பில் புதிய புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது.

சட்ட விரோத செயல்கள்

புதுச்சேரி காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு பகுதியில் சுமார் 1,431 குடும்பங்கள் வசித்து வருகின்றன. குடியிருப்பு பகுதிக்கு அருகே மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது.

குடியிருப்பு பகுதியில் கஞ்சா மற்றும் சட்ட விரோத செயல்கள் நடப்பதாக காவல்துறைக்கு பல புகார்கள் சென்றதால் காலாப்பட்டு காவல் நிலையத்தில் போலீஸ் மற்றும் பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் கடந்த ஆண்டு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா தலைமையில் நடந்தது.கூட்டத்தில் பொதுமக்கள்சார்பில் குடியிருப்பு பகுதியில் குற்ற நடவடிக்கைகளை கண்காணிக்க அங்கு ஒரு புறக்காவல் நிலையம் அமைத்துக் கொடுக்குமாறு கோரிக்கை விடப்பட்டது.

புதிய புறக்காவல் நிலையம்

அக்கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிக் கொடுப்பதாக சீனியர் அவர் உறுதியளித்திருந்தார். அதன்படி அதற்கான இடத்தை தேர்வு செய்யப்பட்டது.

இந்த நிலையில் சுனாமி குடியிருப்பு பகுதியில் புதிய புறக்காவல் நிலைய திறப்பு விழா இன்று நடந்தது. டி.ஜி.பி. மனோஜ்குமார் லால் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். ஏடி.ஜி.பி. அனந்த் மோகன், ஐ.ஜி. சந்திரன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் தீபிகா, சுவாதி சிங், உழவர்கரை ஆணையர் ராஜேஷ் கண்ணா, கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.

விழாவில் பஞ்சாயத்து நிர்வாகிகள் மற்றும் திரளான பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காலாப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம், சப்-இன்ஸ்பெக்டர்கள், இளங்கோ, அருள்மணி மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

1 More update

Next Story