ரூ.15½ கோடியில் கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டி


ரூ.15½ கோடியில் கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டி
x

இந்திராநகர் தொகுதியில் ரூ.15½ கோடியில் கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டியை முதல்-அமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார்.

புதுச்சேரி

இந்திராநகர் தொகுதியில் ரூ.15½ கோடியில் கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டியை முதல்-அமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார்.

மேல்நிலை குடிநீர் தொட்டி

இந்திராநகர் தொகுதி டாக்டர் தனபால் நகர் பகுதியில் ரூ.15 கோடியே 51 லட்சம் செலவில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி, 4 லட்சம் லிட்டர் கொள்ளளவில் கீழ்நிலை தேர்தேக்கத்தொட்டி, நீர் உந்தும் முதன்மை குழாய்கள், ஜெனரேட்டர், வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்புகள் மற்றும் சாலைகளை செப்பனிடும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா இன்று காலை நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு குடிநீர் தொட்டிகளை திறந்து வைத்தார். விழாவில் அமைச்சர் லட்சுமி நாராயணன், எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் பழனியப்பன், கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், உதவி பொறியாளர் சுப்பாராவ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சாலை அமைக்கும் பணி

உழவர்கரை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் வினியோகத்தை மேம்படுத்த குடிநீர் குழாய்கள் மற்றும் சாலைகள் மேம்படுத்தும் பணி ரூ.14 கோடியே 97 லட்சம் செலவில் நடைபெற உள்ளது.

இதேபோல் ராஜ்பவன் தொகுதி அக்காசாமி மடம் வீதியில் ரூ.30 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி, சின்னையாபுரம் குபேர் பாடசாலை அருகில் உள்ள மண்பாதை ரூ.5 லட்சம் செலவில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி, குமரகுரு பள்ளம் பகுதியில் ரூ.38 லட்சத்தில் நகராட்சி சமுதாய நலக்கூடத்திற்கு இரும்பு தகடு கூரை கொண்ட முதல் மாடி கட்டிடம் அமைக்கப்பட உள்ளது.

இந்த பணிகளையும் முதல்-அமைச்சர் ரங்கசாமி பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமி நாராயணன், சிவசங்கர் எம்.எல்.ஏ., மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story