பாப்ஸ்கோ ஊழியர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டம்


பாப்ஸ்கோ ஊழியர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டம்
x

65 மாத நிலுவை சம்பளம் வழங்கக்கோரி பாப்ஸ்கோ ஊழியர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி

65 மாத நிலுவை சம்பளம் வழங்கக்கோரி பாப்ஸ்கோ ஊழியர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கஞ்சி காய்ச்சி...

பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு 65 மாத நிலுவை சம்பளத்தை வழங்கவேண்டும், நிறுவனத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவந்து ஊழியர்கள் அனைவருக்கும் வேலை கொடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பாப்ஸ்கோ ஊழியர்கள் (ஏ.ஐ.டி.யு.சி.) சட்டசபை அருகே தொடர் தர்ணா போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

இன்று 7-வது நாளாக அவர்களது போராட்டம் நீடித்தது. போராட்ட களத்தில் அடுப்புகூட்டிய அவர்கள் அங்கேயே கஞ்சி காய்ச்சி சாப்பிட்டனர்.

கலந்துகொண்டவர்கள்

இந்த போராட்டத்துக்கு பாப்ஸ்கோ ஊழியர் சங்க தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெய்சங்கர், பொருளாளர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஏ.ஐ.டி.யு.சி. கவுரவ தலைவர் அபிசேகம், பொதுச்செயலாளர் சேதுசெல்வம் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். போராட்டத்தில் சங்க நிர்வாகிகள் நடராஜன், முனுசாமி, அமுதவல்லி, பத்மநாபன், ரவி, ஏழுமலை உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story