காரைக்காலில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கவேண்டும்

காரைக்காலில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கவேண்டும்
x

காரைக்காலில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

புதுச்சேரி

காரைக்காலில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் புதுவையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசியல் நாடகம்

தமிழகத்தின் அடையாளம் என்று கூறி செங்கோலை வைத்து பா.ஜ.க. அரசியல் நாடகம் நடத்துகிறது. சுதந்திரத்திற்கும், அதிகார மாற்றத்துக்கும் இது சம்பந்தமில்லாதது. புதுவையில் அரசுப்பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு புதுவை அரசு பொறுப்பேற்க வேண்டும்.

நெல் கொள்முதல்...

காரைக்கால் விவசாயிகளிடமிருந்து சம்பா நெல்லை கொள்முதல் செய்ய புதுவை அரசு ஏற்பாடு செய்யவில்லை. ஆனால் தமிழகத்தில் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழக, புதுவை அரசு மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மருத்துவ கல்வி வாரியம் தடை விதித்தது தனியார் மருத்துவக்கல்லூரிகளை ஊக்குவிக்கும் செயல். குறைபாடுகளை சரிசெய்து இந்த ஆண்டே மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கவேண்டும்.

இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

Next Story