மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்


மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 21 May 2022 11:49 PM IST (Updated: 21 May 2022 11:55 PM IST)
t-max-icont-min-icon

மாடுகள் சாலையில் சுற்றித்திரிந்தால் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என உழவர்கரை நகராட்சி தெரிவித்துள்ளது.

புதுவை

புதுவை உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் சாலையோரம் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று முன்தினம் உழவர்கரை நகராட்சி பகுதிகளில் சுற்றித் திரிந்த 4 மாடுகள் பிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் மாடுகளை சாலையில் சுற்றித் திரிய விட மாட்டோம் என்று உறுதிமொழியும் பெறப்பட்டது. கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளை சொந்த இடத்தில் சுகாதார முறைப்படி வளர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story