ஆளுமை மேம்பாட்டு பயிற்சி கருத்தரங்கு


ஆளுமை மேம்பாட்டு பயிற்சி கருத்தரங்கு
x

புதுவை சாரதா கங்காதரன் கல்லூரியில் ஆளுமை மேம்பாட்டு பயிற்சி கருத்தரங்கு நடைபெற்றது.

புதுச்சேரி

புதுவை சாரதா கங்காதரன் கல்லூரியின் மகளிர் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு குழு, தேசிய மகளிர் ஆணையத்துடன் இணைந்து புதுவையில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவிகளுக்கு திறன்மேம்பாடு மற்றும் ஆளுமை மேம்பாட்டு பயிற்சி கருத்தரங்கு கல்லூரி வளாகத்தில் நடத்தியது. கல்லூரியின் துணைத்தலைவர் பழனிராஜா தலைமை தாங்கி கருத்தரங்கை தொடங்கிவைத்தார்.

புதுவை பல்கலைக்கழக பெண் கல்வி மையத்தின் தலைவர் மற்றும் உதவி பேராசிரியரான ஆயிஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். சென்னை குருநானக் கல்லூரியின் இளநிலை மேலாண்மை துறை உதவி பேராசிரியர் யூஜின் கிங்ஸ்லி மாணவிகள் சமுதாயத்தில் மற்றவர்களுடன் பழகும்போது எவ்வாறு நேர்மறையான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும் என்று தெளிவுப்படுத்தினார். சென்னை பேப்ரிஷியன் கல்லூரி முதுகலை வணிகவியல் துறை தலைவர் யுனிகா மாணவிகள் வேலைக்கு விண்ணப்பிக்கும்போது எவ்வாறு விண்ணப்பம் தயாரிக்க வேண்டும் என்று எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியில் சாரதா கங்காதரன் கல்லூரியின் ஆங்கிலத்துறை பேராசிரியர் தாஸ், மணக்குள விநாயகர் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் துறையின் தலைவர் அருண்மொழி, சாரதா கங்காதரன் கல்லூரி முதல்வர் உதயசூரியன், பாலியல் துன்புறுத்தல் தடுப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஷர்மிளா தேவி, பேராசிரியர் சரஸ்வதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story