போட்டோ ஸ்டூடியோவை உடைத்து கேமராக்கள் திருட்டு


போட்டோ ஸ்டூடியோவை உடைத்து கேமராக்கள் திருட்டு
x

திருபுவனை அருகே உள்ள மதகடிப்பட்டில் போட்டோ ஸ்டூடியோவை உடைத்து கேமராக்களை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருபுவனை

திருபுவனை அருகே உள்ள மதகடிப்பட்டு மடுகரை சாலையில் சிவக்குமார் (வயது 54) என்பவர் டிஜிட்டல் போட்டோ ஸ்டூடியோ வைத்துள்ளார். நேற்று இரவு ஸ்டூடியோவை மூடிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

நேற்று காலை வழக்கம்போல் ஸ்டூடியோவுக்கு வந்தார். அப்போது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடைக்குள் சென்று பார்த்தபோது, 2 விலை உயர்ந்த கேமராக்கள், லைட் ஸ்டாண்ட் உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது. மர்மநபர் யாரோ நள்ளிரவில் ஸ்டூடியோவின் பூட்டை உடைத்து கேமராக்களை திருடிச்சென்றது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து சிவக்குமார் திருபுவனை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கேமராக்களை திருடிய மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

1 More update

Next Story