பிசியோதெரபி தின விழிப்புணர்வு ஊர்வலம்


பிசியோதெரபி தின விழிப்புணர்வு ஊர்வலம்
x

புதுவையில் உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு கோரிமேடு அன்னை தெரசா சுகாதார அறிவியல் நிலைய பிசியோதெரபி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் இன்று நடந்தது.

புதுச்சேரி

உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு புதுவை கோரிமேடு அன்னை தெரசா சுகாதார அறிவியல் நிலைய பிசியோதெரபி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் இன்று நடந்தது. புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா.சைதன்யா, புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.நிகழ்ச்சியில் சுகாதார அறிவியல் நிலைய டீன் ரவிச்சந்திரன், பிசியோதெரபி கல்லூரி முதல்வர் சுப்ரியா வினோத் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தி சென்றனர். இந்த ஊர்வலம் ஒயிட் டவுண் பகுதியில் முக்கிய வீதிகள் வழியாக சென்ற கடற்கரை காந்தி சிலை அருகே முடிவடைந்தது.


Next Story