மீனவர்களுக்கு 50 சதவீத மானியத்தில் பைபர் படகுகள்


மீனவர்களுக்கு 50 சதவீத மானியத்தில் பைபர் படகுகள்
x

மீனவர்களுக்கு 50 சதவீத மானியத்தில் பைபர் படகுகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

புதுச்சேரி

மீனவர்களுக்கு 50 சதவீத மானியத்தில் பைபர் படகுகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

மீனவர்களுக்கு படகு

புதுவை அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயல்படுத்தி வரும் சிறு மீன்பிடி தொழில் மீனவர்களுக்கான மானிய உதவி வழங்கும் திட்டத்தின்கீழ் 2021-22-ம் ஆண்டிற்கான 50 சதவீத மானியத்தில் 300 நபர்களுக்கு கண்ணாடி நுண்ணிழை (பைபர்) படகுகள் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டில் அறிவித்தார்.

அதன்படி ஒருவருக்கு ரூ.16 ஆயிரத்து 500 வீதம் ரூ.6 லட்சத்து 43 ஆயிரத்து 500 மானியத்துடன் புதுவை மாநில மீனவர் கூட்டுறவு சம்மேளனத்தின் வாயிலாக கட்டி முடிக்கப்பட்ட ரூ.33 ஆயிரம் மதிப்பிலான எந்திரமில்லா பைபர் படகு மற்றும் வலையை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி சட்டமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு மீனவர்களுக்கு படகு மற்றும் வலைகளை வழங்கினார்.

ரூ.50 லட்சம் மதிப்பில்...

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், பாஸ்கர், மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜி, இணை இயக்குனர் தெய்வசிகாமணி, துணை இயக்குனர் சவுந்தரபாண்டியன், புதுவை மாநில மீனவர் கூட்டுறவு சம்மேளன செயலாளர் கோவிந்தசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் இந்த நிதியாண்டில் 50 சதவீத மானியத்தில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலை மற்றும் கயிறு பயனாளிகளுக்கு வருகிற 25-ந்தேதி முதல் மீனவர் கூட்டுறவு சம்மேளனம் மூலம் வழங்கப்பட உள்ளது.


Next Story