நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

புதுவை தொண்டமாநத்தம்-சேதராப்பட்டு மற்றும் பிள்ளைச்சாவடி மின்பாதையில் பாராமரிப்பு பணிகள் நடைபெறுகின்ற காரணத்தினால், நாளை (செவ்வாய்கிழமை) மின்சார் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
காலாப்பட்டு
புதுவை தொண்டமாநத்தம்-சேதராப்பட்டு மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தொண்டமாநத்தம் ஒரு பகுதி, ராமநாதபுரம், உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
இதேபோல் பிள்ளைச்சாவடி மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறுவதால் பிள்ளைச்சாவடி, சின்னகாலாப்பட்டு, வி.சி. குடியிருப்பு, பெரியகாலாப்பட்டு, கனகசெட்டிகுளம், உயர்மின் அழுத்த தொழிற்சாலைகள் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
Related Tags :
Next Story






