பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x

அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

அரியாங்குப்பம்

அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் தலைமை தாங்கி, ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் நாகராஜன், மேலாளர் வீரம்மாள், வருவாய் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் அலுவலக ஊழியர்கள், ராதா ஆங்கில மேல்நிலைப்பள்ளி முதல்வர் பெர்லின் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கொம்யூன் பஞ்சாயத்து முன்பு தொடங்கிய இந்த ஊர்வலத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு வீராம்பட்டினம் ரோடு, மாதா கோவில் ரோடு, அரியாங்குப்பம் நகர பகுதி உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். இதனை கொம்யூன் பஞ்சாயத்து இளநிலை எழுத்தர் செழியன் ஒருங்கிணைத்தார்.


Next Story