பிளஸ்-2 மாணவன் தற்கொலை


பிளஸ்-2 மாணவன் தற்கொலை
x

பெற்றோர்கள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் பிளஸ்-2 மாணவன் தற்கொலை கொண்டார். போலீசார் தீவிர விசாரணை.

அரியாங்குப்பம்

அரியாங்குப்பம் ஆர்.கே. நகர் சிவலிங்கபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு தினகரன், சதீஷ், சந்துரு ஆகிய 3 மகன்கள் உள்ளனர். ரமேஷ் லிபியா நாட்டில் வேலை செய்து வரும் நிலையில், மகன்களை தனது பெற்றோரிடம் விட்டு விட்டு கடந்த சில ஆண்டுக்கு முன் லட்சுமியும் அங்கு சென்றார்.

புதுச்சேரி ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த சந்துரு, சமீபத்தில் சென்னையில் நடந்த ஆக்கி போட்டியில் பங்கேற்றுவிட்டு, நேற்று இரவு வீடு திரும்பினார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்த புகாரின்பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story