போலீசார் ரோந்து பணி


போலீசார் ரோந்து பணி
x

புதுவை கடற்கரை சாலையில் இரவு போலீசார் பணியில் ஈடுபட்டனர்

புதுச்சேரி

புதுச்சேரி சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா உத்தரவின் பேரில் கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு சுவாதி சிங் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், நாகராஜ் மற்றும் போலீசார் இன்று இரவு கடற்கரை சாலையில் ரோந்து பணி மேற்கொண்டனர். இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு சுவாதி சிங் கூறுகையில், 'புதுவையில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடந்தால் அவர்கள் உடனடியாக 1091 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும் அந்தந்த பகுதியில் உள்ள காவல் நிலையங்களிலும், நிலைய அதிகாரிகளிடமும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

1 More update

Next Story