பொன்னு மாரியம்மன் கோவில் தேரோட்டம்


பொன்னு மாரியம்மன் கோவில் தேரோட்டம்
x

முத்தியால்பேட்டை பொன்னு மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் இன்று நடந்தது.

புதுச்சேரி

முத்தியால்பேட்டை மெயின்ரோட்டில் உள்ள பொன்னுமாரியம்மன் பிரம்மோற்சவ விழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடல் உற்சவம் இன்று மாலை நடந்தது. அப்போது பக்தர்கள் தங்களின் உடலில் அலகு குத்தி நேர்க்கடன் செலுத்தினர். இதையடுத்து திருத்தேரில் அம்மன், விநாயகர் எழுந்தருளினர். தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. இதற்காக அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

1 More update

Next Story