வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு


வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
x

புதுவையில் நடந்த மாநில அளவிலான கேரம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

புதுச்சேரி

புதுவை கேரம் சங்கம் சார்பில் மாநில அளவிலான சீனியர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தரவரிசை பட்டியலுக்கான கேரம் விளையாட்டு போட்டிகள் சங்க வளாகத்தில் நடந்தது. இந்த போட்டிகளில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். போட்டிகளை சங்க கவுரவ தலைவரான சிவசங்கரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். நடுவர்களாக இருதயராஜ், செந்தமிழ் செல்வன் ஆகியோரும் பணியாற்றினார்கள்.

நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் ஜெகஜோதி, ஞானஇருதயராஜ், பரஞ்ஜோதி, பெரியசாமி, திருமூர்த்தி, சீனுவாசன், அன்பு, அருண் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த போட்டிகளில் ஆண்கள் பிரிவில் முதல் 3 இடங்களை முறையே செபஸ்டின், வேல்முருகன், அந்தோணி ஸ்டீபன்ராஜ் ஆகியோரும், பெண்கள் பிரிவில் அதினா, பூஜா, காயத்ரி ஆகியோரும் பிடித்தனர். இப்போட்டிகளில் முதல் 6 இடங்களை பிடித்த வீரர்களின் தகுதிகளின் அடிப்படையில் வருகிற நவம்பர் மாதம் 7-ந்தேதி முதல் 11-ந்தேதி வரையில் டெல்லியில் நடைபெறும் 50-வது சீனியர் தேசிய கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் புதுச்சேரி சார்பில் கலந்துகொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story