காவல் துறையில் 50 பேருக்கு பதவி உயர்வு


காவல் துறையில் 50 பேருக்கு பதவி உயர்வு
x

புதுச்சேரி காவல்துறையில் போலீஸ் அதிகாரிகள் 50 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது,

புதுச்சேரி

புதுச்சேரி காவல்துறையில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தொடர்ந்து இடமாற்றம், பதவி உயர்வு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் புதுவை காவல்துறையில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலய்யன் (வில்லியனூர்), விசுவநாதன் ஆகியோருக்கு அடாக் முறையில் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.

மேலும் உதவி சப்-இன்ஸ்பெக்டர் குமாரசாமி சப்-இன்ஸ்பெக்டராகவும், 47 போலீஸ்காரர்கள், ஏட்டாகவும் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை புதுவை காவல்துறை தலைமையக போலீஸ் சூப்பிரண்டு சுபம்கோஷ் உத்தரவிட்டுள்ளார்.


Next Story