பி.ஆர்.டி.சி. ஊழியர்களுக்கு 2 மாத சம்பளம் நிலுவை

புதுச்சேரி
புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழக (பி.ஆர்.டி.சி.) ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வேலையன் வெளியிடுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த 2 வருடமாக போனஸ் தொகை வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு போனஸ் ரூ.11 ஆயிரம் அறிவிக்கப்பட்டது. அதில் ரூ.7 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டது. மேலும் நிரந்தர ஊழியர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக போனஸ் வழங்கப்படவில்லை. ஊழியர்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும். அத்துடன் நிலுவையில் உள்ள 3 ஆண்டு போனஸ் தொகையையும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






