பி.ஆர்.டி.சி. ஊழியர்களுக்கு 2 மாத சம்பளம் நிலுவை

புதுச்சேரி
புதுவை சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வேலைய்யன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை சாலை போக்குவரத்து கழக (பி.ஆர்.டி.சி.) ஊழியர்களுக்கு மார்ச், ஏப்ரல் மாதத்துக்கான சம்பளம் வழங்கப்படவில்லை. மேலும் 10 வருடங்கள் பணி முடித்த ஒப்பந்த ஊழியர்களுக்கு பணிநிரந்தரம் செய்யப்படவில்லை. நிரந்தர ஊழியர்களுக்கு கடந்த 2 வருடத்தோடு இந்த வருடமும் சேர்த்து 3 வருடத்துக்கான போனஸ் வழங்கப்படவில்லை. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 41 சதவீதம், 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைக்கான சம்பளம் மற்றும் 2-ம் கட்ட பதவி உயர்வு 96 ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. 4 பிராந்தியங்களிலும் 18 பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த வருடமும், இந்த வருடமும் சேர்த்து சுமார் ரூ.27 கோடி அரசு நிதி ஒதுக்கியும் நிர்வாகம் எந்தவித பணியையும் அதற்காக செய்யாமல் இருப்பது கவலை அளிக்கிறது.
ஊழியர்கள் நலனில் அக்கறை கொண்டு நிலுவையில் உள்ள 2 மாத சம்பளம் மற்றும் போனஸ் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். இதுதொடர்பாக முதல்-அமைச்சர், போக்குவரத்துத்துறை அமைச்சர், துறை செயலாளர் மற்றும் மேலாண் இயக்குனர்களுக்கு கடிதம் அளிக்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.