பெண்களுக்கான 33 சதவீத ஒதுக்கீட்டில் புதுச்சேரி இடம் பெறவில்லை


பெண்களுக்கான 33 சதவீத ஒதுக்கீட்டில் புதுச்சேரி இடம் பெறவில்லை
x

பெண்களுக்கான 33 சதவீத ஒதுக்கீட்டில் புதுச்சேரி இடம் பெறவில்லை என வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.

புதுச்சேரி

சட்டமன்றம் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் விதமாக நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவில் யூனியன் பிரதேசங்களில் புதுச்சேரி, ஜம்மு, காஷ்மீர் குறிப்பிடப்படவில்லை. அதேநேரத்தில் டெல்லி சட்டசபையில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையில் விதியை திருத்தம் செய்வது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து வைத்திலிங்கம் எம்.பி., நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி அர்ஜூன் ராம் மேக்வாலின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார். புதுச்சேரியிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் அமல்படுத்தப்படும்போது அதற்கு போதிய ஏற்பாடு செய்யப்படும் என்று மத்திய மந்திரி அர்ஜூன்ராம் மேக்வாலும் உறுதி அளித்துள்ளார்.


Next Story