புதுக்குப்பம் சாலை சீரமைப்பு


புதுக்குப்பம் சாலை சீரமைப்பு
x

புதுவை அடுத்த தவளக்குப்பம்- பூரணாங்குப்பம் சந்திப்பில் இருந்து புதுக்குப்பம் தார்சாலை சீரமைக்கப்பட்டது.

அரியாங்குப்பம்

தவளக்குப்பம்- பூரணாங்குப்பம் சந்திப்பில் இருந்து புதுக்குப்பம் செல்ல தார்சாலை வசதி உள்ளது. இந்த சாலையோரத்தில் சில வீடுகளின் கழிவுநீர் வெளியே வந்து ரோட்டில் தேங்கியதால், ஜல்லி கற்கள் பெயர்ந்து சாலை சேதமடைந்து இருந்தது. இந்த வழியாக கடற்கரை, சொகுசு வீடுதிகளுக்கு செல்லும் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதை சரிசெய்ய பொதுமக்கள் வைத்த கோரிக்கையின்பேரில், தற்காலிகமாக மண் கொட்டி சீரமைக்கப்பட்டது. இருப்பினும் நிரந்தரமாக இந்த சாலையை சீரமைக்க பல்வேறு கோரிக்கைகள் எழுந்தது.

இந்த நிலையில் தொகுதி எம்.எல்.ஏ.வும் சபாநாயகருமான செல்வம், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை நேரில் அழைத்து சாலையை சீரமைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் புதுக்குப்பம் சாலை அமைக்கப்பட்டது

1 More update

Next Story