மழைநீர் சேகரிப்பு பயிற்சி முகாம்

புதுவை வேளாண் விவசாயிகள் நலத்துறை பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் நடந்தது
புதுச்சேரி
புதுவை வேளாண் விவசாயிகள் நலத்துறை பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம், ஆத்மா, காமராஜர் அறிவியல் நிலையம் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் நடந்தது. காலாப்பட்டு வேளாண் அலுவலர் தண்டபாணி வரவேற்றார். வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசுப்ரமணியன் தலைமை தாங்கினார்.
வேளாண் அறிவியல் நிலைய பூச்சிகள் துறை தொழில்நுட்ப வல்லுனர் விஜயகுமார் நோக்க உரையாற்றினார். வேளாண் பொறியியல் பிரிவு துணை வேளாண் இயக்குனர் பிரபாகரன், நீர் பாதுகாப்பு மற்றும் அவற்றின் அவசியம் குறித்து விளக்கினார். ஜெயச்சந்திரன் ஆரோ சொசைட்டி வீடுகளில் மழைநீர் சேகரிப்பு குறித்த நுணுக்கங்கள் குறித்து விளக்கினார். முகாமில் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
Related Tags :
Next Story