துப்புரவு தொழிலாளர்களுக்கு ரங்கோலி போட்டி


துப்புரவு தொழிலாளர்களுக்கு ரங்கோலி போட்டி
x

காரைக்காாலில் சுகாதார விழிப்புணர்வை வலியுறுத்தி துப்புரவு தொழிலாளர்களுக்கு ரங்கோலி போட்டி நடத்தப்பட்டது.

காரைக்கால்

மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் இரண்டு வார தூய்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக காரைக்கால் மாவட்ட நிர்வாகம், காரைக்கால் நகராட்சி மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் சுகாதாரம் மற்றும் பசுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துப்புரவு பணியாளர்களுக்கு ரங்கோலி போட்டி இன்று நடைபெற்றது. நகராட்சி ஆணையர் சத்யா போட்டியை தொடங்கி வைத்தார்.

இப்போட்டியில் ஒரு குழுவுக்கு 4 பேர் வீதம் 30 குழுக்கள் பங்கேற்றன. நகராட்சி பகுதியில் குப்பைகளை சேகரிக்கும் நிறுவன முதன்மை இயக்க அதிகாரி நரேந்திரன், வெங்கட்ராமன், உதயபாஸ்கர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

போட்டியில் பங்கேற்ற துப்புரவு தொழிலாளர்களுக்கு சிறுதானிய உணவு அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. போட்டியில் சிறந்த ரங்கோலி தேர்வு செய்யப்பட்டு அக்டோபர் 2-ந் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் பரிசு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story