நிதி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்


நிதி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்
x

நிதி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து பதிவாளர் கோகுல்நாத் விளக்கம் அளித்துள்ளார்.

புதுச்சேரி

நிதி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து பதிவாளர் கோகுல்நாத் விளக்கம் அளித்துள்ளார்.

புதுவை நிதி நிறுவனங்களின் பதிவாளர் கோகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பங்கு மூலதனம்

நிதி ஒரு பொது நிறுவனமாக இருக்கவேண்டும். குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் செலுத்தப்பட்ட ஒப்பு பங்கு மூலதனத்தை கொண்டிருக்கவேண்டும். நிதி நிறுவனமானது சீட்டு நிதி நிறுவனம், வாடகை கொள்முதல், குத்தகை நிதி, காப்பீடு அல்லது கூட்டு குழும நிறுவனங்களால் வழங்கப்படும் பிணையங்களை முயன்றடைதல் போன்ற வணிகங்களை மேற்கொள்ளக்கூடாது. எந்த பெயரிலும் அல்லது எந்த வகையிலும் எந்த வடிவிலும் முன்னுரிமை பங்குகள், கடனீட்டு ஆவணங்கள் அல்லது பிற கடன் பத்திரங்களை வெளியிடக்கூடாது.

நிதி நிறுவனம் எந்த நிறுவனத்தின் பிணையங்களையும் முயன்றடைதல் அல்லது கொள்முதல் செய்தல் கூடாது. அல்லது வேறு எந்த நிறுவனத்தின் இயக்குனர் குழுமத்தை எந்த விதத்திலும் கட்டுப்படுத்த அல்லது அதன் நிர்வாகத்தை மாற்றுவதற்கான எந்த ஏற்பாட்டிலும் ஈடுபடக்கூடாது.

வருமான விவர அறிக்கை

தனது சொந்த பெயரில் கடன் வாங்கும் அல்லது கடன் கொடுக்கும் தொழிலை தவிர வேறு எந்த தொழிலையும் மேற்கொள்ளக்கூடாது. உறுப்பினர்களை தவிர வேறு எவரிடமிருந்தும் வைப்புநிதிகளை பெறவோ, கடன் கொடுக்கவோ கூடாது. ஒரு கூட்டு குழுமத்தை அல்லது அறக்கட்டளையை உறுப்பினராக அனுமதிக்கக்கூடாது.

தனி நபர் ஒருவரை தொடர்ச்சியாக 5 ஆண்டு காலத்துக்கு மேல் தணிக்கையாளராக பணியமர்த்தக்கூடாது. ஒவ்வொரு நிதி நிறுவனமும் ஒவ்வொரு அரையாண்டு முடிவடைந்ததில் இருந்து 30 நாட்களுக்குள் பதிவாளரிடம் தொழிற்பயிற்சியில் உள்ள நிறுவன செயலர் அல்லது பட்டய கணக்கர் அல்லது கணக்காளரால் உரியவாறு சான்றளிக்கப்பட்ட அரையாண்டு வருமான விவர அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story