ரூ.16 லட்சத்தில் சாலை, வடிகால் வசதி


ரூ.16 லட்சத்தில் சாலை, வடிகால் வசதி
x

முதலியார்பேட்டையில் ரூ.16 லட்சத்தில் சாலை, வடிகால் வசதியை சம்பத் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்.

புதுச்சேரி

புதுவை முதலியார்பேட்டை நைனார்மண்டபம் சுதானா நகர் கமலம் வீதியில் புதியதாக சாலை மற்றும் வடிகால் வசதி ரூ.15 லட்சத்து 81 ஆயிரம் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பணிகளை சம்பத் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமார், செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் வெங்கடாஜலபதி, இளநிலை பொறியாளர் ரமேஷ் உள்பட அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story