ரூ.26½ லட்சத்தில் சாலை, சுற்றுச்சுவர்


ரூ.26½ லட்சத்தில் சாலை, சுற்றுச்சுவர்
x

நெடுங்காட்டில் ரூ.26½ லட்சத்தில் சாலை, சுற்றுச்சுவர் அமைக்க பணியை அமைச்சர் சந்திர பிரியங்கா தொடங்கி வைத்தார்.

காரைக்கால்

காரைக்காலை அடுத்த நெடுங்காடு நல்லாத்தூர் மேலபடுகை சாலையை மேம்படுத்துதல், வாதியான் இருப்பு சாலை மற்றும் கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தின் சுற்றுச்சுவர், மேலகாசாகுடி கல்லறை குட்டையில் சுற்றுசுவரை கட்டுதல் உள்ளிட்ட பணிகள் ரூ.26 லட்சத்து 62 ஆயிரம் செலவில் நடக்கிறது. இந்த பணிகளை அமைச்சர் சந்திர பிரியங்கா பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் பாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story