ரூ.4.45 கோடியில் சாலை விரிவாக்க பணி


ரூ.4.45 கோடியில் சாலை விரிவாக்க பணி
x

மரக்காணக்தில் ரூ,.4.45 கோடியில் சாலை விரிவாக்க பணிக்காண பூமி பூஜை நடைப்பெற்றது.

மரக்காணம்

மரக்காணம் - தேன்பாக்கம் சாலை, திண்டிவனம் - மரக்காணம் சாலை ஆகியவை கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் ஒரு முக்கியமான சாலையாகும். ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலங்களில் அதிக அளவு மழை பெய்ததின் காரணமாக, போதிய மழைநீர் வடிகால் இல்லாததால் மழைநீர் தேங்கி, சாலையின் ஓடுதள பாதை பெரும்பாலான இடங்களில் பழுதாகி உள்ளது. ஆதலால் வாகன ஓட்டிகளுக்கு அதிக சிரமம் ஏற்படுவதுடன் பயணங்களில் காலதாமதம் ஏற்படுகிறது, இதன்காரணமாகவே, மரக்காணம் - தேன்பாக்கம் சாலையை ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4.45 கோடி மதிப்பீட்டில் சாலை உறுதிப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

அவற்றில் ரூ.41.57 லட்சம் மதிப்பீட்டில் 1.035 கி.மீ தூரம் சாலைப்பணியும், ரூ.23.86 லட்சம் மதிப்பீட்டில் 2 எண்ணிக்கை கொண்ட சிறுபாலம் அமைக்கும் பணிகளும், ரூ.275.54 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளது. இதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், திண்டிவனம் சார் ஆட்சியர் கட்டா ரவி தேஜா, மரக்காணம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் தயாளன், ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் பழனி, நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் சிவசேனா, உதவி பொறியாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story