மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி


மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி
x

புதுவை கொடாத்தூர் அரசு உயர்நிலை பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

திருக்கனூர்

புதுவை கொடாத்தூர் அரசு உயர்நிலை பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. கராத்தே பயிற்சியாளர் சரவணன் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். இதன் நிறைவு விழா பள்ளி வளாகத்தில் பொறுப்பு ஆசிரியர் குமாரவேல் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பயிற்சி பெற்ற மாணவிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதைத்தொடர்ந்து மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

முன்னதாக ஆசிரியர் கார்த்திக் வரவேற்றார். இதில் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் ரகுமான் நன்றி கூறினார்.


Next Story