காட்சிப்பொருளான மோர் பந்தல்கள்


காட்சிப்பொருளான மோர் பந்தல்கள்
x

புதுவை தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் காட்சிப்பொருளாக மோர் பந்தல்கள் உள்ளன.

அரியாங்குப்பம்

கோடையை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவச மோர் பந்தல் வழங்க அ.தி.மு.க., தி.மு.க.வினர் தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் போட்டி போட்டுக்கொண்டு பந்தல் அமைத்தனர்.

கோடைகாலம் முடிந்த நிலையில் தற்போது நீர் மோர் எதுவும் வழங்கப்படாமல் காட்சிப் பொருளாக நிற்கும் மோர் பந்தல் மோட்டார் சைக்கிள் நிறுத்தும் இடமாகவும், பயணிகள், பொதுமக்கள் நிற்கும் இடமாகவும் மாறி உள்ளது.

புதுச்சேரி-கடலூர் இ.சி.ஆர். மெயின் ரோட்டில் தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் அகற்றப்படாமல் விடப்பட்ட மோர்ப்பந்தல்கள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இந்த வழியே செல்லும் அதிகாரிகள் இதை கண்டு கொள்வதில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே, உடனடியாக பந்தலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story