தங்கையை தாக்கிய சகோதரிகள்


தங்கையை தாக்கிய சகோதரிகள்
x
தினத்தந்தி 26 May 2023 5:05 PM GMT (Updated: 27 May 2023 5:00 AM GMT)

கோட்டுச்சேரியில் குடும்ப தகராறு காரணமாக தங்கையை தாக்கி சகோதரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கோட்டுச்சேரி

காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி வடமட்டம் பகுதியில் வசிப்பவர் அம்சவள்ளி (வயது37). இவரது மூத்த சகோதரிகள் மரகதம் (42), தமிழ்செல்வி (40). இவர்களுக்கு திருமணமாகி, தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

இந்தநிலையில் 3 பேருக்கும் குடும்ப தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று மரகதம் வீட்டு அருகே அம்சவள்ளி சென்றபோது அங்கு வந்த மூத்த சகோதரிகள் இருவரும் அம்சவள்ளியிடம் தகராறு செய்து பிளாஸ்டிக் பைப்பால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த அவர், கோட்டுச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story