பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு


பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

புதுச்சேரி

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

புரட்டாசி சனிக்கிழமை

பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசியில் ஒவ்வொரு சனிக்கிழமைகளில் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். விரதம் இருந்து பெருமாளை கும்பிடுவது காலம் காலமாக இந்துக்கள் கடைபிடிக்கும் பழக்கமாகும். இந்த காலகட்டத்தில் அவர்கள் அசைவ உணவுகளை தவிர்ப்பார்கள்.

குறிப்பாக சனிக்கிழமைகளில் தங்களது விரதத்தை தீவிரமாக கடைபிடிப்பார்கள். புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான இன்று இந்துக்கள் விரதத்தை தொடங்கினர்.

கூட்டம் அலைமோதியது

இதையொட்டி காலை முதலே பெருமாள் கோவில்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. காந்திவீதி வரதராஜ பெருமாள் கோவில், முதலியார்பேட்டை வன்னியபெருமாள் கோவில், முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணாநகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவில், எம்.எஸ்.அக்ரகாரம் வீர ஆஞ்சநேயர் கோதண்டராமர் கோவில், மகாவீர் நகர் பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

புரட்டாசி விரதம் தொடங்கியுள்ளதால் இறைச்சி கடைகளில் கூட்டம் குறைந்துள்ளது. மீன் மார்க்கெட்டுகளிலும் மக்கள் குறைவாக காணப்படுகின்றனர்.


Next Story