தொழிலாளர் துறை அலுவலகத்தை ஸ்பின்கோ ஊழியர்கள் முற்றுகை


தொழிலாளர் துறை அலுவலகத்தை ஸ்பின்கோ ஊழியர்கள் முற்றுகை
x

புதுவையில் தொழிலாளர் துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட ஸ்பின்கோ ஊழியர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

புதுச்சேரி

தொழிலாளர் துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட ஸ்பின்கோ ஊழியர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஸ்பின்கோ மூடல்

திருபுவனை ஸ்பின்கோ கூட்டுறவு நூற்பாலை கடந்த ஜூன் மாதம் திடீரென மூடப்பட்டது. இதனால் வேலையிழந்த ஊழியர்கள் ஆலையை திறக்கக்கோரி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் அவர்கள் ஆலைக்குள் நுழையும் போராட்டத்தை நடத்தினார்கள். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதைத்தொடர்ந்து அவர்கள் விழுப்புரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தநிலையில் நேற்று அவர்கள், தொழிலாளர்துறையை முற்றுகையிட போவதாக அறிவித்தனர். இதற்காக வழுதாவூர் ரோட்டில் கூடினார்கள். அங்கிருந்து ஊர்வலமாக சென்று தொழிலாளர்துறையை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர்.

தள்ளுமுள்ளு

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர் சங்க நிர்வாகிகள் சிவசங்கரன், மஞ்சினி, ரஞ்சித் உள்பட 22 பேரை கைது செய்தனர்.

கைதான அனைவரும் சிறிது நேரம் கோரிமேடு காவல்நிலையத்தில் தங்கவைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.


Next Story