மாநில அளவிலான கராத்தே போட்டி


மாநில அளவிலான கராத்தே போட்டி
x

புதுச்சேரி கராத்தே சங்கம் சார்பில் 23-வது மாநில அளவிலான கராத்தே (சாம்போ) சாம்பியன்சிப் போட்டி நடைபெற்றது.

திருபுவனை

புதுச்சேரி கராத்தே சங்கம் சார்பில் 23-வது மாநில அளவிலான கராத்தே (சாம்போ) சாம்பியன்சிப் போட்டி மற்றும் துளசி சுழற்கோப்பை போட்டி மதகடிப்பட்டு அமர்த்தீஸ்வரி திருமண மண்டபத்தில் நடந்தது. போட்டிக்கு கராத்தே சங்க இணைச்செயலாளர் மதிஒளி தலைமை தாங்கினார். போட்டியில் கிராமப்புறங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

போட்டியின் முடிவில் முதல் பரிசு, சுழற்கோப்பையை மதகடிப்பட்டு பாரததேவி பள்ளி மாணவர்களும், 2-வது பரிசு, சுழற்கோப்பையை திருக்கனூர் சுப்ரமணிய பாரதி பள்ளி மாணவர்களும் தட்டி சென்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அங்காளன் எம்.எல்.ஏ., கராத்தே சங்க தலைவர் இளங்கோவன், சம்போ சங்க கவுரவ தலைவர் திருவேங்கடம், சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர், பேராசிரியர் ராஜவேலு, புதுச்சேரி சுயநிதி தனியார் பள்ளி கூட்டமைப்பு தலைவர் ரங்கநாதன், திருக்கனூர் சுப்ரமணிய பாரதி பள்ளி தாளாளர் சம்பத், மதகடிப்பட்டு பாரததேவி பள்ளி தாளாளர் இளமதி அழகன், திருபுவனை அன்னை வித்யா மந்திர் பள்ளி தாளாளர் தனசெல்வம், சாம்போ சங்க நிர்வாகிகள் ஜனார்த்தனன், கோதண்டராமன், ரவிச்சந்திரன், சரவணன், பழனிராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினர். முடிவில் ஆசிரியர் சரவணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.


Next Story