பழுதாகியுள்ள அரசு கட்டிடங்களை சீரமைக்க நடவடிக்கை


பழுதாகியுள்ள அரசு கட்டிடங்களை சீரமைக்க நடவடிக்கை
x

காரைக்காலில் பழுதாகியுள்ள அரசு கட்டிடங்களை சீரமைக்க நடவடிக்கை நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் அறிவுறுத்தினார்.

காரைக்கால்

காரைக்கால் மாவட்ட கலெக்டராக குலோத்துங்கன் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அரசு அலுவலகங்களில் திடீரென சென்று ஆய்வு செய்கிறார்.

அதன் ஒரு பகுதியாக காரைக்காலை அடுத்துள்ள நெடுங்காட்டில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள வருகை பதிவேட்டை பார்வையிட்டு அதிகாரிகள், ஊழியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வருகிறார்களா? என கேட்டறிந்தார். மேலும் குறித்த நேரத்தில் பணிக்கு வரும்படி அங்குள்ள ஊழியர்களை கேட்டுக்கொண்டார்.

தினமும் எத்தனை நோயாளிகள் சிகிச்சை பெற வருகிறார்கள், எத்தனை நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது, நோயாளிகள் தங்குவதற்கு படுக்கை வசதிகள் இருக்கிறதா? மருந்து, மாத்திரைகள் இருப்பு உள்ளதா? என அங்கு பணியில் இருக்கும் டாக்டர் கேசவராஜிடம் கலெக்டர் கேட்டறிந்தார். பல இடங்களில் அரசு கட்டிடங்கள் பழுதாகி உள்ளதை அறிந்த கலெக்டர் அனைத்தையும் உடனே சீர் செய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் இயங்கும் பள்ளி மாணவிகள் தங்கும் விடுதி, குரும்பகரத்தில் அமைந்துள்ள கால்நடை மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் கலெக்டர் குலோத்துங்கன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


Next Story