புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதி உலா


புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதி உலா
x

காரைக்காலில் தங்க மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதி உலா வந்தார்.

காரைக்கால்

காரைக்கால் தலத்தெருவில் பழமை வாய்ந்த சிவகாமி அம்மாள் சமேத சிவலோகநாத சுவாமி தேவஸ்தானம் உள்ளது. இந்த தேவஸ்தானத்திற்கு சொந்தமான தங்கமாரியம்மன் கோவிலில் கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது. திருவிழாவின் 6-ம் நாளான நேற்று இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தங்க மாரியம்மன் அன்ன வாகனத்தில் 14 கரங்களுடன் புவனமாரியம்மன் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் அம்மன் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story