சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்


சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
x

நோணாங்குப்பத்தில் சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

அரியாங்குப்பம்

அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பம் சுந்தர விநாயகர், முத்து மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று நடந்தது. இதையொட்டி இன்று காலை யாகசாலை பூஜையை தொடர்ந்து கடம்புறம்பாடு நடந்தது. பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் சபாநாயகர் செல்வம், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20-ம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழு தலைவர் பூபாலன், துணைத் தலைவர் கோவிந்தன், செயலாளர் திருமுருகன், பொருளாளர் முருகையன், உறுப்பினர் சித்ரா பெரியசாமி மற்றும் விழா குழுவினர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story