சுப்ரீம் கோர்ட்டு குழு 25-ந்தேதி புதுவை வருகை

சுப்ரீம்கோர்ட்டு உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள குழு வருகிற 25-ந்தேதி வரை உள்ள நிலையில் சாலை பாதுகாப்பு குழுவின் உயர்மட்ட குழு ஆலோசனை நடந்தது.
புதுச்சேரி
சுப்ரீம்கோர்ட்டு உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள குழு வருகிற 25-ந்தேதி வரை உள்ள நிலையில் சாலை பாதுகாப்பு குழுவின் உயர்மட்ட குழு ஆலோசனை நடந்தது.
ஆலோசனை கூட்டம்
சாலை விபத்துகளை குறைப்பது, உயிரிழப்புகளை தடுப்பது குறித்து சுப்ரீம்கோர்ட்டு உத்தரவின்படி குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு வருகிற 25-ந்தேதி புதுச்சேரிக்கு வர உள்ளது.
இந்த குழு புதுவையில் சாலை போக்குவரத்து வசதிகள், விபத்துகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளது. இதுதொடர்பான முன் ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று நடந்தது.
துறை வாரியாக விளக்கம்
கூட்டத்துக்கு தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா தலைமை தாங்கினார். கூட்டத்தில் அரசு செயலாளர்கள் முத்தம்மா, கேசவன், வல்லவன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரிஜேந்திர குமார் யாதவ், போக்குவரத்து ஆணையர் சிவக்குமார், போலீஸ் சூப்பிரண்டு மாறன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் புதுவையில் உள்ள போக்குவரத்து வசதிகள், தடையற்ற போக்குவரத்துக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள், விபத்துகளை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறித்து அதிகாரிகள் துறைவாரியாக எடுத்துக்கூறினார்கள். இவை அனைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள குழுவிடம் விளக்கப்பட உள்ளது.