பாகூர் ஏரியில் தாசில்தார் திடீர் ஆய்வு


பாகூர் ஏரியில் தாசில்தார் திடீர் ஆய்வு
x

பாகூர் ஏரியில் தாசில்தார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பாகூர்

புதுவை மாநிலத்தின் 2-வது பெரிய ஏரியாக பாகூர் ஏரி திகழ்கிறது. இந்த ஏரியில் இருந்து வண்டல் மண் அள்ளிக்கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 10 நாட்களாக பாகூர் ஏரியில் இருந்து டிப்பர் லாரிகள் மூலம் மண் எடுக்கப்பட்டு வருகிறது. வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு அதிகாரிகள் கண்காணிப்பில் மண் எடுக்கும் பணி நடக்கிறது.

இந்த ஏரியில் உரிமம் இல்லாமல் லாரிகளில் மண் எடுப்பதாகவும், 1 மீட்டர் ஆழத்துக்கு அதிமாக மண் எடுப்பதாகவும் புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து பாகூர் தாசில்தார் கோபாலகிருஷ்ணன், துணை தாசில்தார் விமலன், வருவாய் ஆய்வாளர் நாகராஜ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது உரிமம் இல்லாத லாரியை அனுமதிக்க கூடாது என்றும், அரசு நிர்ணயித்த அளவில் மண் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.


Next Story