தமிழ் தேசிய பேரியக்கத்தினர் பிரசாரம்

புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கக்கோரி தமிழ் தேசிய பேரியக்கத்தினர் பிரசாரம்
புதுச்சேரி
புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை அரசியல் கட்சியினர் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் பிரசார இயக்கம் நேற்று தொடங்கியது. புதுவை ராஜா தியேட்டர் அருகே நடந்த இந்த பிரசார இயக்கத்துக்கு தமிழ் தேசிய பேரியக்க செயலாளர் வேல்சாமி தலைமை தாங்கினார். பிரசாரத்தை பொதுச்செயலாளர் வெங்கட்ராமன் தொடங்கி வைத்தார்.
கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மீனவர் விடுதலை வேங்கைகள் மங்கையர்செல்வன், நாம் தமிழர் கட்சி பொருளாளர் இளங்கோவன், மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு செயலாளர் முருகானந்தம், தமிழர் களம் அழகர், நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்க செயலாளர் ரமேஷ், தன்னுரிமை கழக சடகோபன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story






